இலங்கையில் இன்றைய தினம் (13) கொரோனா பாதிப்பு காரணமாக 05 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா பாதிப்பினால் இதுவரை மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் மரணித்தவர்களில் ஒருவர் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான பெண் என்றும், அவர் வீட்டிலேயே மரணமடைந்துள்ளார்.

இரண்டாவது நபர் 68 வயதுடைய சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த ஆண் என்பதுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

மூன்றாவது நபர் ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் என்பதுடன் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துள்ளார்.

நான்காவது நபர் கொழும்பு 13 இனை சேர்ந்த 78 வயதுடைய ஆண் என்பதுடன் அவர் வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார்.

ஐந்தாவது நபர் கொழும்பு 13 இனை சேர்ந்த 64 வயதுடைய ஆண் என்பதுடன் அவர் வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.