கொவிட் பாதிப்புடன் மரணித்தவர்களது உடல்களை தகனம் செய்வதே ஒரே தீர்வு என்று நிபுணர் குழு தெரிவிப்பு - சுகாதார பணிப்பாளர் நாயகம்

Rihmy Hakeem
By -
0


கொவிட் பாதிப்பு காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை தொடர்ந்தும் தகனம் செய்வதே சிறந்தது என சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட குறித்த நிபுணர் குழு, இந்த விவகாரத்தை பரிசீலித்து, கொவிட் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரே தீர்வு என அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொவிட் பாதிப்புடன் இறந்த முஸ்லிம்களின் உடல்களை தலைமன்னாரில் அடக்கம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிகமான அமைச்சர்கள் அதற்கு இணங்கியிருந்தனர்.

எனினும் சுகாதார நிபுணர்கள் குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)