நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 491 தொற்றாளர்கள் பற்றிய விபரங்கள் : 60 தொற்றாளர்கள் குறித்த தகவல்கள் இல்லை

Rihmy Hakeem
By -
0

 நேற்றைய தினம் (21) நாட்டில் மொத்தமாக 491 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாக கொவிட் இனை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 487 பேர் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்கள் எனவும், 04 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 292 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 87 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்

அவர்களில் 60 பேர் "வேறு" என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்களின் பிரதேசங்கள் பற்றிய தகவல் இல்லை என்று தெரியவருகிறது. 

இவ்வாறு கடந்த ஒக்டோபர் 04 முதல் இதுவரை "வேறு" என்ற பிரிவில் மொத்தமாக 210 தொற்றாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)