நேற்றைய தினம் (10) நாட்டில் 430 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

 அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 251 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரெனவும், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் புளுமென்டல்-4, பொரலை-5, தெமட்டகொட-17, கிரான்பாஸ்-32, கெசல்வத்த-25, கிருலப்பனை-4, கொள்ளுப்பிட்டிய-55, வெல்லம்பிட்டிய-1, மாளிகாவத்த-20, தெஹிவளை-1, கொட்டாஞ்சேனை-11, மருதானை-20,மட்டக்குளிய-8, மிரிஹான-1, கொலன்னாவை-7, முகத்துவாரம்-4, கல்கிஸை-7 மற்றும் கோட்டை பிரதேசத்தில் 28 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். அவர்களில் களனிய - 08, அத்தனகல்ல - 05, வத்தளை - 03, மஹர - 02 தொற்றாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இது தவிர களுத்துறை-16, புத்தளம்-6, இரத்தினபுரி-8, கண்டி-4, கேகாலை-4, மட்டக்களப்பு-1, காலி-2, திருகோணமலை-1, நுவரெலியா-1, போகம்பறை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் 24 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் பொலிஸ் திணைக்களத்தில் 91 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

முழுமையான பட்டியல் (Updated)




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.