இன்றைய தினம் (07) கொவிட் தொற்று காரணமாக 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒருவர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவராவார்.
இரண்டாவது நபரும் மாளிகாவத்தையை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஆவார். சுகயீனம் காரணமாக கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுதித்த பின்னர் மரணமடைந்துள்ளதுடன் மரணத்திற்கு காரணமாக கொரோனா தொற்று மற்றும் நியுமோனியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நபர் வெல்லம்பிடியை சேர்ந்த 67 வயதுடைய ஆண் என்பதுடன் சுகயீனமுற்ற நிலையில் வீட்டில் மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொரோனா வைரஸ் மற்றும் நியுமோனியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது நபர் கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய பெண் என்பதுடன் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட நிலையில் அங்கொட தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கும் கொரோனா மற்றும் நியுமோனியா காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.