கொவிட் 19 வைரஸ் நோய் அறிகுறிகளுடனான நபர்களை வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்கு முன்னர் 011 7966366 என்ற விசேட தொலைபேசி இலக்கத்த்துடன்  தொடர்பு கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ குணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நோய் அறிகுறிகளைக்கொண்டவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது ஏனைய நபர்களுக்கு நோய் பரவ கூடிய நிலைமை ஏற்படும் என்பதினால் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாரும் அப்பொழுது சம்பந்தப்பட்ட நோயாளர் இருக்கும் இடத்திற்கு விசேட சுகாதார குழுவொன்று விரையும் என்றும் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ குணசிங்க தெரிவித்தார்.

தற்பொழுது பரவிவரும் கொரோனா வைரஸ் பிரதேசத்தில் உள்ள வைரசின் அளவு பாரியதாகுமென்றும் குறுகிய காலத்தில் அது வேகமாக பரவ கூடிய தன்மை இருப்பதினால் பொதுமக்கள் எப்பொழுதும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ குணசிங்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.