பன்னிபிட்டிய, எரவ்வல தர்மபால வித்தியாலய மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 17 வயதான மாணவனொருவன், பந்து அருகிலிருந்த வீட்டுத்தோட்ட வளாகத்திற்கு சென்றதனையடுத்து அதை எடுக்கச் சென்ற போது அம்மாணவன் மீது வைத்தியர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்ததால் காயமடைந்த குறித்த மாணவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பாடசாலை மாணவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வைத்தியர் மஹரகமை அபேக்சா வைத்தியசாலையில் கடமை புரிபவர் என்று தெரியவருகிறது.