சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல்,   20ஆவது திருத்த சட்டமூலத்தை  நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்காதென இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர், ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவு முக்கியமானதொன்று என்றும் கூறினார்.

அத்தோடு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் அவர்கள் இந்தச் சாதனையை அடைய முடியாது என்று அவர் கூறினார்.

மேலும், நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து இதுபோன்ற முடிவுகள் எட்டப்படுவதாகவும் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.