கொரோனா பாதிப்பு காரணமாக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றிரவு (19) 25 வயது தாயுடன் தப்பிச் சென்ற 02 வயது மகன் இன்று காலை எஹலியகொடை பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தாய் தனது மகனை எஹலியகொடை பிரதேசத்தில் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தற்போது மகன் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீட்டிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழந்தை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன் மீண்டும் ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் சென்றுள்ள பெண் ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.