சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்கத் தவறியதே இந்த முடிவுக்கு காரணம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர், வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

தற்போது நாங்கள் அறிந்த வகையில் சமூகத்திற்குள் அதிகளவு தொற்று பரவியுள்ளது. தொடர்ந்தும் எமக்கு பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது.

பி.சி.ஆர் பரிசோதனை  மேற்கொள்வதில் காணப்படும் பற்றாக்குறை முதலாவது பிரச்சினையாக காணப்படுகின்றது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என நாங்கள் நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

(வீரகேசரி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.