கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் நேற்றிரவு (19) வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு 9.10 மணியளவில் எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.