அங்கொட ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான கொவிட் தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை (22) குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
தெமட்டகொடையை சேர்ந்த 22 வயதுடைய குறித்த நபரை பாதுகாப்பாக சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.