சில் ஆடை´ வழக்கு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடம் சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரை குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமதுனி விக்கிரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பினை வழங்கிய நீதிபதி குமதுனி விக்கிரமசிங்க, குறித்த வழக்கின் மனுதாரர் தரப்பினர் மற்றும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை விரிவாக பகுப்பாய்வு செய்து இந்த தீர்ப்பினை வழங்கியதாக குறிப்பிட்டார்.

ஏற்கனவே சில் துணி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள  3 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர்.

2015ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாய் நிதியில் சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவத்தில் இருவரும் குற்றவாளிகள் என, கொழும்பு மேல் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.