வைத்தியர் எஸ்.எச். முனசிங்ஹ

செயலாளர், 

சுகாதார அமைச்சு,

கொழும்பு 10.


வைத்தியர் S.H.முனசிங்ஹ அவர்களுக்கு,

விஞ்ஞான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட இலங்கையிலுள்ள covid-19 தொற்று காரணமாக,  உயிரிழந்தவர்களின்  உடல்களை அகற்றுவதற்கான மதிப்பாய்வு

தற்போது இலங்கையில்  covid-19 இனால் உயிரிழந்தவர்களை அகற்றுவதற்கான ஒரேயொரு வழிமுறை அவர்களை  தகனம் செய்வது ஆகும்.

2020ஆம் ஆண்டின் ஜனவரி/ பெப்ரவரி மற்றும் மார்ச் மாத ஆரம்ப பகுதி வரை SARS COV2 வைரஸ் பற்றிய போதுமான தகவல்கள் இலங்கை விஞ்ஞான சமூகத்திடம் காணப்படாமையே  நெறிமுறைகள் தயாரிக்கப்படும் போது இந்த முடிவு எடுக்கப்பட்டமைக்கு அடிப்படையாகும்.

இலங்கையின் சட்ட மருத்துவத்துறை, தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆகியவற்றில் இலங்கை நிபுணர்களின்  இவ் வைரஸ் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சி தரவுகளின் பற்றாக்குறையின் காரணமாக , உயிரிழந்தவர்களிடமிருந்து உயிர்வாழ்பவர்களுக்கு  வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்க முடிவு செய்ததோடு, அந்த நேரத்தில்  உறுதியான அறிவியல், நெறிமுறை மற்றும் தார்மீக சான்றுகள் இல்லாமையால் தகனம் செய்யுமாறு சிபாரிசு செய்தனர்.

2019 டிசம்பர் இன் பிற்பகுதியில் / ஜனவரி 2020 ஆரம்பத்தில் வைரஸ் அடையாளம் காணப்பட்ட திலிருந்து இப்போது 180 நாட்கள் அல்லது சுமார் ஆறு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில்  SARS COV2 வைரஸின் கட்டமைப்பு ,பண்புகள் தொற்றுநோயியல் மற்றும் நோயியல் இயற்பியல் குறித்து ஏராளமான அறிவியல் ரீதியான வெளியீடுகள் வந்துள்ளன.

இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக உயிரிழந்தவரிடம் இருந்து மண்,நீரிற்கு வைரஸின் பரவுகை மண் , நீர்  வழியாக பொதுமக்களை  வைரஸ் அடைவதுடன் சர்வதேச, உள்நாட்டில் பொது சுகாதார பிரச்சனைகளை  ஏற்படுத்தல் தொடர்பான  விஞ்ஞான இலக்கிய வெளியீடுகளை  திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.முன்பு கூறப்பட்டது போல் SARS Covid-2 பற்றிய விஞ்ஞானம் எமக்கு முழுமையாக தெரியாது.

வைரஸ் தொடர்பான அறிவின் இந்த பாரிய இடைவெளி பொது மக்களின் சுகாதாரம் தொடர்பான ஆர்வம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்காக செயல்படுவதை சவாலாக்கியுள்ளது.

 இது ஏனெனில் விஞ்ஞானிகள் அதி விருப்பத்துடன் தமது கொள்கையை வலியுறுத்த சான்றாதாரங்களுக்கு  முற்றிலும் எதிரான நோக்குடையவர்களாக இருப்பதாலாகும்.

இந்த அறிவியல் இடைவெளி உயரிய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட எந்த  தீர்மானங்களினதும் விஞ்ஞானம் மற்றும் நெறிமுறை விடயத்தில் கடினத் தெரிவை ஏற்படுத்தியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் தீர்மானம் மேற்கொள்பவர்கள் Covid - 19 இனால் உயிரிழந்தவர்களை, ஏற்றுக்கொள்ளப்பட்ட  நெறிமுறை விஞ்ஞானத்திற்கு அமைவாக  இறுதியாக அகற்றுவதில்  விஞ்ஞான மற்றும் நெறிமுறையில் உள்ள கடினத் தெரிவை தீர்ப்பதற்கு போதுமான அல்லது ஏதாவது கவனம் செலுத்தியுள்ளார்களா?

இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தின் நிலைப்பாடு என்னவென்றால் சுகாதார அதிகாரிகளால்  கொவிட் நைட்டினினால் உயிழந்தவர்களை அகற்றுவது குறித்து என்ன வழிமுறைகளை பின்பற்றமாறு ஆலோசனை  வழங்கப்பட்டதோ அதை பின்பற்றுவதாகும்.

சுகாதார அதிகாரிகள் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதை சிபாரிசு செய்வதற்கு அடிப்படையாக அமைந்த 03 காரணங்களும் பின்வருமாறு,

1. SARS COV 2 வைரஸ் குறித்து பூரணமான அறிவு  தற்போதும் அறியப்படவில்லை இக்கருத்து 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது மற்றும் 2020 ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெற்ற சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடனான கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது.

2. இலங்கையில்  உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும் போது நீர் வட்டம் வழியாக இவ் வைரஸானது பரவக்கூடும் இதனால் நீர் வட்டம் மாசுபடுத்துவதுடன் நீரின் மூலம் மக்களின் பெரும் பகுதியினருக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம். ஆகவே தொற்றின் பரவல் நிலை மேலும் மோசமடையலாம்.

3. இலங்கை முஸ்லிம்களின் போர்க்குணமிக்க வரலாற்றை கருத்தில்கொண்டு (எடுத்துக்காட்டாக ஏப்ரல் ,21 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு). இலங்கை முஸ்லிம்கள் COVID-19 இனால் இறந்த உடலை மற்ற இலங்கை மக்களுக்கு எதிராக உயிரியல் ஆயுதம் ஆக பயன்படுத்தலாம் . இந்த அறிக்கையை சில நாட்களுக்குப் பிறகு ஏப்ரல், 18 2020 BBC தொலைக்காட்சி நேர்காணலில் சுகாதார அமைச்சு அதிகாரி பகிரங்கமாக கூறியிருந்தார்.

நவம்பர் 2020இல் மேலே ஒவ்வொன்றிற்கும் ஆன சான்றுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன

1. இலங்கை முஸ்லிம்களின் இறந்த உடலில் இருந்து வைரஸ் இனை பிரித்து எடுத்து அதனை பெருமளவில் சேதங்களை ஏற்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்ற கருத்து உலகில் எங்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 தற்போது கிடைக்கப்பெறும் அறிவியல் அறிக்கைகளின் படி உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் முயற்சிக்கான

தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் மிகவும் சிக்கலானதோடு  இலங்கையில் செயற்படும் தீவிரவாத இஸ்லாமிய குழுக்களுக்கு சாத்தியமற்ற விடயமுமாகும். Covid -19 வைரஸை ஆயுதமாக்கும் செயல்முறைக்கு குறைந்தபட்சம்  உயிரியல் பாதுகாப்பு மட்டம் (BSL) 3 அல்லது அதற்கு மேற்பட்ட வசதியுள்ள ஆய்வு கூடம் தேவைப்படுவதோடு .ஸ்ரீ ஜயவர்தனபுர, கொழும்பு , பேராதெனிய பல்கலைக்கழகங்கள் மற்றும் சுகாதார  அமைச்சின்  மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவையே பிஎஸ்எல் 3  நிலை ஆராய்ச்சி மையங்களை தற்போது

கொண்டுள்ளன. இதனை தவிர்த்து இவ்வாறான ஆராய்ச்சி நிறுவனங்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் உளவுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களின் ஆதிக்க வரம்பு மற்றும் கண்காணிப்புக்கு வெளியே உள்ளன என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 

SARS COV 2 வைரஸினை ஆயுதமாக்கும்  அடிப்படை தொடர்பான சர்வதேச தரவுகளின் அறிவியல் தேடல்களுக்கு எந்த

பெறுபேறுகளும் கிடைக்கவில்லை.   இத்தகைய செயல்முறையானது சர்வதேச மட்டத்தில் உண்மையில் இருக்குமானால் அது 

தீஙகுபயக்கக்கூடிய சாத்தியமா hiன விஞ்ஞானிகளிடம் சேர்வது தடுத்து வைக்கப்பட்டிருக்கும்.

2.SARS COVID-19 இனால் உயிரிழந்தவர்களை புதைக்கின்ற நாடுகளில் வைரஸின் பரவுகை மற்றும் அதனால் பொது சுகாதார பிரச்சனைகள் ஏற்படுதல் பற்றிய அறிவு  தொடர்பாக சர்வதேச விஞ்ஞான தரவுத்தளங்கள் எந்த பெறுபேறுகளையும் கொண்டிருக்கவில்லை.

24 March 2020 மற்றும் 4 September 2020   WHO  இனால் நடாத்தப்பட்ட COVID 19 தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் எனும் இடைக்கால வழிகாட்டலில்  , covid 19 சந்தர்ப்பங்களில்   உயிரிழந்தவர்களின்  உடல்களை புதைத்தலுடன் தொடர்புடைய, கிடைக்கப் பெற்ற விஞ்ஞான, நெறிமுறை மற்றும் விழுமிய விடயங்களை மதிப்பாய்வு செய்த  பின்பு பாதுகாப்பான முகாமைத்துவத்திற்கு  அவற்றை புதைக்குமாறு  தெளிவாக சிபாரிசு செய்கிறது. ( *WHO இந்த புதைத்தல் தெரிவை இன்று வரை மாற்றம் செய்யவும் இல்லை.)* 

3.SARS covid 2 இன் ground water table இனுள் பெருமளவிலான பரவுகை தொடர்பான சர்வதேச மீளாய்வு இலக்கியங்கள் தொடர்பான தகவல்களை கூட சர்வதேச தரவுத்தளங்கள் கொண்டிருக்கவில்லை.

WHO மற்றும் UNICEF இன் நீர், சுகாதாரம் மற்றும் கழிவு முகாமைத்துவம்    என தலைப்பிடப்பட்ட   19

 March 2020 மற்றும் 29 July 2020 இடைக்கால வழிகாட்டலில் SARS Covid 2 இனால் நிலத்தடி நீர் மாசடைதல்  தொடர்பான விடயம் பற்றி தகவல்களையும் சிபாரிசுகளையும் வழங்குகிறது. இடைக்கால வழிகாட்டல் அறிக்கையில் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பந்தி கீழே தரப்பட்டுள்ளது. *(WHO மற்றும் UNICEF COVID 19 ஆல் உயிரிழந்தவர்களை  புதைத்தல் எனும் தெரிவை இன்று வரை மாற்றம்செய்யவில்லை)* 

நடைமுறையில் COVID வைரஸ்  குடி நீர் மற்றும் சாக்கடை நீரில் தொடர்ச்சியாக நிலைத்திருப்பது  தொடர்பான எந்த ஆதாரமும் இல்லை.

COVID 19  இன்  உருவவியல் மற்றும் இரசாயன கட்டமைப்பு மற்றைய மனித CORONA வைரஸ்கள் போன்றதாகும்.இந்த வைரஸ்களின் சூழலில் தொடர்ச்சியான நிலைத்திருப்பிற்கான மற்றும் செயற்றிரனான செயழிழப்பை மேற்கொள்வதற்குமான தரவுகள் காணப்படுகிறது.இந்த ஆவணம் சான்றடிப்படை மற்றும் சாக்கடை, குடி நீரினை வைரசுகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்தல் தொடர்பான WHO இன் வழிகாட்டல்களை கொண்டுள்ளது.

புதிய தகவல்கள் கிடைக்கப் பெறும் போது இந்த ஆவணம் 

புதுப்பிக்கப்படும். இலங்கை சுகாதாரஅதிகாரிகளால் மேற்கோள்காட்டப்பட்ட 

3 தலைமையான காரணங்களும் சர்வதேச வழிகாட்டல் உரைகளுடன் நேரடியாக முரண்படுவதோடு இலங்கை சுகாதாரஅதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை பற்றிய கற்கையை மேற்கொள்ள விஞ்ஞான சமூகத்திற்கு எந்த வித உள்நாட்டு தரவுகளும் கிடைக்கப் பெற வழிவகுக்காமையினாலும்  COVID 19  இனால் இறந்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது.

மேலும் 4 November 2020 இல் COVID 19  சந்தர்ப்பத்தில் பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை நெகிழ்ந்து கொடுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் பற்றிய  இடைக்கால வழிகாட்டலில் தனது அங்கத்தினருக்கு WHO தெளிவாக ஆலோசனை கூறுகையில் PHSM நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவை சமூக மற்றும் தனிநபர் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பொருளாதாரம், பாதுகாப்பு, உள ஆரோக்கியம்,  சமூக உளவியல் நன்னிலை, மனித  உரிமைகள், உணவுப் பாதுகாப்பு, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகிய விடயங்களில் அவற்றின் தாக்கத்தை கருத்திற் கொள்ள வேண்டும்.

ஒட்டு மொத்தமாக  PHSM ஐ நடைமுறை படுத்தும் போது சமூகத்தின் சுகாதாரம் மற்றும் நன்னிலை முன்னணியில் கருத்தில் கொள்ள வேண்டும் என தனது வழிகாட்டலில் சுருக்கமாக கூறுகிறது.

தகனம் செய்தல் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் 2 மில்லியன் இலங்கை முஸ்லிம்கள் உளவியல் மற்றும் சமூக உளவியல் சுகாதாரம் பாதிக்கப்படுகின்றது. COVID இனால் உயிரிழந்தவர்களில் 48% முஸ்லிம் மக்கள் ஆகும்.

CoviD 19 ஆல் உயிரிழந்த முஸ்லிம்களை தகனம் செய்வது எவ்வாறு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அண்மையில்  முஸ்லிம் முதியவர் வெளியிட்ட பின்வரும் கூற்று சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.

"எந்த நேரத்திலும் உலகின் எந்த இடத்திலும் கொரனா வைரஸ் என்னை தொற்றுவது குறித்து நான் பயப்படவில்லை. ஆனால் அதனால் நான் உயிரிழந்தால் எரிக்கப்படுவது  குறித்து பயப்படுகிறேன்"

நாம் சித்தரித்து காட்டுவதைப் போல் மற்றும் எந்த வித ஐயமுமின்றி விஞ்ஞான,மருத்துவ நெறிமுறை மற்றும் விழுமிய அடிப்படையில் நம்பத்தகுந்த சான்றாதாரங்களை கொண்டிராத இந்த COVID 19 இனால் உயிரிழந்தவர்களை தகனம் மட்டுமே செய்தல் எனும் தீர்மானம்  அரசியல், சமூக நிலை அல்லது எந்தவொரு அளவுகோலின் அடிப்படையும் பாராது அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் உளவியல் மற்றும் சமூகஉளவியல் ரீதியாக இடர்களை ஏற்படுத்தியுள்ளதை மக்களின் பிரதிநிதியாக  நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.

நாங்கள் 2020 மார்ச் மாதத்திலிருந்து குறைந்தது தகனம் மட்டுமே செய்தல் மற்றும் COVID 19  இனால் உயிரிழந்தவர்களை புதைத்தல் தெரிவை உள்ளடக்குதல் போன்றவற்றை மதிப்பாய்வு செய்வதற்காக விஞ்ஞான, மருத்துவ மற்றும் அரசியல் உருவமைப்புகளை இலங்கை அரசாங்கத்திற்கு உருவாக்கி வழங்கியிருந்தும் அது பலனளிக்கவில்லை.

ஆகவே இலங்கையின் குடிமக்களின் ஒரு அங்கமாக நாம் இப்போது COVID 19 இனால் இறந்தவர்களை தகனம் மட்டுமே செய்ய வேண்டும் எனும் கொள்கையை மதிப்பாய்வு செய்வதற்கு மனிதாபிமான மற்றும் அனுதாபங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திடம் மன்றாட்டத்திணை மேற்கொள்கிறோம்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொள்வதன் மூலம் இறந்தவர்களை தகனம் மட்டுமே செய்ய வேண்டும் என்று கொள்கையை மறு ஆய்வு செய்ய தேவையான அறிவியல் மற்றும் நிர்வாக செயல் முறைகளை நீங்கள் விரைவாக செய்வீர்கள் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.

உண்மையுள்ள

நாட்டுப் பற்று கொண்ட இலங்கை முஸ்லிம்கள்.


இணைப்புகள்:

 1. 2 இணைப்புகள் -    

   தொற்று நோய் பரவல் மற்றும் COVID 19 சந்தர்ப்பத்தில்  இறந்த உடல்களின் பாதுகாப்பான முகாமைத்துவத்திற்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக WHO ஆல்  மார்ச் 24, 2020 மற்றும் 4 செப்டம்பர் 2020 தேதியிட்ட  இடைக்கால வழிகாட்டுதல்

 2. 3 இணைப்புகள் -நீர், சுகாதாரம்,  மற்றும் கோவிட் -19 வைரஸிற்கான கழிவு முகாமைத்துவம் தொடர்பாக, மார்ச் 19, 2020, 19 ஏப்ரல் 2020 மற்றும் 29 தேதியிட்ட இடைக்கால வழிகாட்டுதல்.

 3.   COVID-19 சந்தர்ப்பத்தில்  பொது சுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை நெகிழ்ந்து கொடுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான கருத்தில் கொள்ளுகை தொடர்பான  4 நவம்பர் 2020  தேதியிடப்பட்ட இடைக்கால வழிகாட்டுதல்

 4. கோவிட் -19 குறித்த அறிக்கை: யுனெஸ்கோ சர்வதேச பயோஎதிக்ஸ் கமிட்டி (ஐபிசி) மற்றும் யுனெஸ்கோ உலக ஆணையம், அறிவியல் அறிவு மற்றும் தொழில்நுட்ப நெறிமுறைகள் (COMEST) ஆகியவற்றின் உலகளாவிய செயல்திறன் அறிக்கையிலிருந்து 2020 மார்ச் 26 தேதியிட்ட நெறிமுறை ஆலோசனைகள்.

 5. COVID-19 உடன் இறந்த நபர்களின் உடல்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள் - இலங்கையில் COVID-19 உடன் இறந்த நபர்களின் உடல்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான தொழில்முறை செயற்குழு (இலங்கையில் நீர்-புவியியல் காரணிகளை விவரிக்கிறது  COVID இறந்ததை அகற்றுவது)

 கூடுதல் வாசிப்பு

 1. கோவிட் இனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஈமச்சடங்கு உரிமைகள்- நீதிபதி டாக்டர் சலீம் மார்ஷூப் மற்றும் பலர்

 2. 2020 மார்ச் 25 தேதியிட்ட  HE, ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட , COVID -19 இறந்தவர்களை தகனம் மட்டுமே செய்தல் கொள்கையை மதிப்பாய்வு செய்யக் கோரிய ஆரம்ப கடிதம். (இதில் தரவுகள் மற்றும் வழிகாட்டல்களை உள்வாரியாக மேற்கோள் காட்டி புதைத்தல் எனும் தெரிவை உள்ளடக்குவதற்கான பெருமளவிலான மேற்கோள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது)

 3. ஏப்ரல் 13, 2020 அன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் நடைபெற்ற கூட்டத்தின் நிமிடங்கள்

 4. COVID-19 (மார்ச் 2020) மருத்துவ மேலாண்மைக்கான தற்காலிக வழிகாட்டுதலின் 7 ஆம் அத்தியாயத்தின் மூலம் தற்போதைய COVID-19 தொற்று நோய் தொற்றுநோய்களின் போது பிரேத பரிசோதனை பயிற்சி மற்றும் இறந்த உடலை அகற்றுவது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.