புத்தளம் மாவட்டத்திலுள்ள சிலாபம், வெல்ல பிரதேசத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இன்று (26) பகலிலிருந்து தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட வடக்கு கடற்கரை பிரிவு,தெற்கு கடற்கரை பிரிவு, குருசபாடு, ஏகொடவத்த, கடற்கரை பிரிவு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசங்களில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் (05 நாட்களில் 13 பேர்), இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவை பணிப்பாளர், வைத்தியர் தினுசா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.