-தவசீலன்-

முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியில் இன்று (10) திடீரென பல ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் கரையொதுங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெரும் கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்காலிலேயே இவ் அதிசயிக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (09) மாலை தொடக்கம் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவே மீன் குஞ்சுகள் உயிருடன் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கரையொதுங்கிய மீன்குஞ்சுகள் கெழுத்தி இன வகையை சார்ந்த மீன் குஞ்சுகளே ஆகும். மேலும் கரையொதுங்கிய மீன் குஞ்சுகளை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுவதோடு வலை வீசியும் பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.