அலரி மாளிகையில் என்ன நடக்கிறது..?

முடக்கப்பட்டுள்ளது நான் கூட அங்கு சென்று பணியாற்ற முடியாது என பசில் ராஜபக்ச சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகை முடக்கப்படவில்லை என பிரதமரின் ஊடக செயலாளார் தெரிவித்துள்ளமை குறித்தும் அவர்கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் ஊடக செயலாளர் சொன்னதும் முற்றிலும் பொய் என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச அலரிமாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளதுஇஎன்னால் அங்குள்ள அலுவலகங்களை பயன்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை அறிய விரும்பினால் நீங்கள் யாரையாவது அனுப்பிபார்க்கலாம், அந்த பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது, பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர், என பசில் ராஜபக்ச தெரிவித்தார் என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பிரதமரின் ஊடக செயலாளருக்கு தான் என்ன செய்கின்றேன் என்பது தெரியாது உண்மைக்கு மாறான விடயங்களை தெரிவிப்பதன் மூலம் பிரதமரின் பெயருக்கு களங்கத்தையும் அவருக்கு தர்மசங்கடமான நிலையையும் ஏற்படுத்துகின்றனர் அவர்கள் ஏற்படுத்துகின்றனர் என பசில் ராஜபக்ச சீற்றம் வெளியிட்டுள்ளார்.

என்னை பற்றி அவர்கள் தெரிவித்ததும் பிழையான விடயங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது நடந்திருக்க கூடாது அவர்களிற்கு அதற்கான அனுமதியில்லை எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் எதனையும் மறைக்க விரும்புபவரில்லை அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையானவர் முகத்துக்கு நேரே பேசுபவர் என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் வெளிப்படையானவர்களாக மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்காதவர்களாகயிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையை மறைப்பதால் என்ன பயன்? பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட முடக்கலின் பின்னர் அலரிமாளிகைக்கு செல்லவில்லை என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.