புதிய வைரசின் புதிய வடிவம் தொடர்பாக (Strain) அறிக்கை சுகாதார அமைச்சுக்கு கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொடர்பான அறிக்கை குறித்து விசேட அறிக்கை ஒன்றை அமைச்சர் வெளியிட்டார். இதன்போது இந்த வைரசின் செயற்பாடு குறித்து சுகாதார அமைச்சர் கருத்து தெரிவித்தார். இந்த வைரஸ் துரிதமாக பரவக்கூடியது என்பது இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். இம்முறை கொவிட் - 19 வைரசின் தன்மை தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார். இதற்கமைவாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவி உள்ளிட்ட குழுவினர் இந்த வைரசின் (Strain) தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கமைவான ஆய்வு அறிக்கை சுகாதார அமைச்சிற்கு கிடைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு அமைவாக இந்த காலப்பகுதியில் இலங்கையில் தற்பொழுது ஒருவகை வைரஸ் உள்ளது. இது மினுவாங்கொடை, பேருவளை, மீன் சந்தை, உள்ளிட்ட  பல இடங்களில் உண்டு.

இந்த ஆய்வின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் , இந்த வைரஸ் மிகவும் வேகமாக உடலிற்குள் ஊடுருவி பாரிய அளவில் வளர்ச்சி அடைவதுடன் மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மையுடைய வைரஸ் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் முன்னர் இருந்த கொவிட் வைரஸ் வகையிலும் பார்க்க இந்த வைரஸ் மாறுபட்டது. இந்த வைரஸ் B142 பிரிவிற்கான துணை குழுவில் அடங்கும் சார்ஸ் வைரசுடன் தொடர்புபட்டதாகும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற ரீதியில் இந்த நோயை இலங்கையில் இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.இதற்கு பொது மக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

பொது மக்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து தங்களது ஒத்துழைப்பை இந்த வேலைத்திட்டத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும்  அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.