முல்லேரியாவிலுள்ள PCR இயந்திரத்தினை நாளை முதல் வழமைக்கு கொண்டு வர முடியும் - சீன தூதரகம் நம்பிக்கை

Rihmy Hakeem
By -
0

 


முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்த நிலையில் இருக்கும் PCR பரிசோதனை இயந்திரத்தை நாளை (02) முதல் வழமைக்கு கொண்டுவர முடியும் என இலங்கையில் உள்ள சீன தூதரகம் ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த இயந்திரத்தில் உள்ள கோளாறு தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயந்திரத்தின் இயக்கப்பகுதியிலேயே சிறு கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பிரதான நடவடிக்கைகள் சாதாரணமான முறையில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)