கம்பஹா மாவட்டம், ராகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நோய் நிலைமை காரணமாக நேற்று (05) ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய 10 பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இருந்த போதிலும் பொலிஸ் நிலையத்தின் நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
தற்போது நிலையில் நாடு பூராகவும் 358 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 199 பேர் மேல் மாகாணத்திலிருந்து இனங்காணப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது