தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பம்

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23) காலை ஆரம்பமானது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள 5,100 பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.
மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வழமைபோல் பாடசாலைகளுக்கு வந்திருந்தனர்,

மாணவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் வந்ததும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சுகாதார இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் வகுப்பறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அட்டன் கல்வி வலயத்தில் உள்ள, அட்டன் வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் இன்று திறக்கப்படவில்லை.

இப்பகுதிகளில் நேற்று (22) கொரோனா தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

thumbnail news.lk

thumbnail news.lk2கருத்துரையிடுக

Blogger இயக்குவது.