குருநாகல் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நிலவியிருக்கும் கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக அங்குள்ள சில பிரதேச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட மாட்டாது என்றும் அவை மேலும் ஒரு வாரம் மூடப்படும் எனவும் வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தெரிவித்தார்.

வட மேல் மாகாண ஆளுநரின் காரியாலயத்தில் இன்றைய தினம் (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

வட மேல் மாகாண சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பிரகாரம் மாணவர்களின் நலனுக்காக மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இது குறித்து கல்வி அமைச்சரிடம் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி குருநாகல் மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கும் சகல பாடசாலைகள், குருநாகல் மற்றும் மல்லவபிட்டிய சுகாதார பிரிவுகளுக்கு உட்பட்ட சகல பாடசாலைகள், குளியாப்பிடிய நகர சபை எல்லைக்கு உட்பட்ட சகல பாடசாலைகள், குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயம், கனதுல்ல மகா வித்தியாலயம், தியகலமுல்ல மகா வித்தியாலயம், பன்னல நகர எல்லைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் ஈரியகொல்ல மகா வித்தியாலயம், ரிதீகம சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ரம்பொடகல்ல மகா வித்தியாலயம், நாரம்மலை எல்லைக்கு உட்பட்ட சகல பாடசாலைகளும், மஹவ சுகாதார பிரிவுக்கு உட்பட்ட கஜனக்கம், அம்பகஸ்வெவ, பலல்ல, யாப்பஹுவ மகா வித்தியாலயம் மற்றும் மஹவ விஜயபா மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் மேலும் ஒரு வாரம் மூடப்படும் எனவும் வட மேல் மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.