கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் பொருட் தொழில் மேம்பாட்டு அமைச்சினால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற  " சியபத"  வீடமைப்புத் திட்டத்தின் தேசிய ஆரம்ப விழா கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த உள்ளிட்ட பிற அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் திவுலபிடிய, மரதகஹமுல, வெவேகொடெல்ல இடத்தில் நடைபெற்றது.

இந்த வீட்டுத் திட்டம் 5 அடுக்கு மாடிகளையும் 100 வீடுகளையும் கொண்டது. மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் கெளரவ பிரதமர் மற்றும் வீடமைப்பு அமைச்சர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகீயோரின் அறிவுறுத்தலின் பேரில் இது செயல்படுத்தப்படுகிறது.

அதே நேரம் இந்த வீட்டுத் திட்டம் 9 மாகாணங்களில் ஆரம்பிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தத் திட்டம் அனைத்து 160 தேர்தல் தொகுதிகளிலும் செயல்படுத்தப்படும். மேலும் இந்த வேலைத் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை 16,000 ஆகும்.

கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 16 வெற்றியாளர்களுக்கு தேசிய லொத்தர் சபையினால் 750 மில்லியன் ரூபா பரிசுகளாக இந்த வைபவத்தின் போது வழங்கப்பட்டது.

தேசிய லொத்தர் சபையினால் புதிய அதிர்ஷ்ட லாபச் சீட்டான  " செவன"  லொத்தர் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோகிலா ஹர்ஷனி குணவர்தன, மிலான் ஜயதிலக, உபுல் ராஜபக்‌ஷ, நளின் பெர்ணான்டோ, சஹான் பிரதீப் மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.