ஒரு இனம் / மதம் சார்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது : உடல்களை தகனம் செய்வது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும்

Rihmy Hakeem
By -
0

 


கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்தல் தொடர்பிலான தீர்மானம் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த விசேட மருத்துவர் சுதத் சமரவீர கருத்து வெளியிட்டார்.

இதுவரை காலமும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே அமுலானது. இது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும்.

இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது. வைரஸ் தொற்று பரவும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

இவையெல்லாம் நாட்டு நலன் கருதி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் என டொக்டர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)