ஐக்கிய அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை (03)  தொடங்கி, புதன்கிழமை அதிகாலை நிறைவடைந்தது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும், ஜோ பைடனும் இந்தத் தோ்தலில் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனா்.

அமெரிக்க ஜனாதிபதி தோ்ந்தெடுக்கப்படுவதற்கு, மொத்தமுள்ள 538 தோ்தல் சபை வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கையான 270 வாக்குகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 264 தோ்தல் சபை வாக்குகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். அதே போல் 214 தோ்தல் சபை வாக்குகளுடன் குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப் பின்தங்கியுள்ளமை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.