வில்பத்து வனத்தினை அண்டிய கல்லாறு பிரதேசத்தில் காடழப்பு செய்யப்பட்டமை சட்டவிரோதம் என மேல் நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள குடியமர்த்துவதற்காக கல்லாறு பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடழிப்பு செய்தமை சட்ட விரோதமாகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய குறித்த பகுதியில் தனிப்பட்ட நிதியை பயன்படுத்தி மீள் மர நடுகை திட்டமொன்றை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் முறைப்பாட்டாளர்களுக்கு வழக்குகளுக்காக செலவான தொகையினை மீள செலுத்துமாறும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.