2021ம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் முடிவடைகின்ற நிலையிலேயே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

எனினும், மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளும் குறித்த திகதியில் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை அனைத்து மாணவர்களையும் எவ்வித தடையுமின்றி அடுத்த தரத்திற்கு தரம் உயர்த்துமாறும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வருடம் பூர்த்தி செய்யப்படாத பாடப்பரப்புகளை எதிர்வரும் முதலாம் தவணையின் முதல் இரண்டு மாதங்களில் பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை அந்தந்த பாடசாலைகளில் போட்டு செயற்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.