தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 40 பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பயணிகளை நிற்க வைத்து அழைத்துச் சென்றால் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு பதிலாக போக்குவரத்து அதிகார சபையுடன் கலந்துரையாடி, பேருந்துகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. பேருந்து உரிமையாளரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இருப்பின், இந்த காலத்தில் மேலதிக பயணங்களை கலந்துரையாடி பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.