மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் எதிர்வரும் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.