கொரோனா தொற்றுக்கு எதிரான பூர்வீக மருந்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் எதிர்பார்ப்புடன் உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (08) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

´தற்போது உலக சுகாதார ஸ்தாபனம் அந்த தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இடையில் சமமாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இலங்கையின் பங்கை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடியுள்ளது. அதற்கமைய அந்த தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரித்து இலங்கைக்கும் அது கிடைக்கும். அதேபோல் உள்நாட்டில் ஆயர்வேத மருந்து ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்தும் அரசாங்கம் சிறந்த முறையில் ஆராய்ந்து வருகின்றது. தற்போது மேற்கத்தேய மருந்தின் பாவனை குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றோம். ஆகவே எதிர்வரும் 3 அல்லது 6 மாதங்களுக்குள் உலகும் எமது நாட்டுக்கும் தொற்றிலிருந்து மீள வழி பிறக்கும் என நம்புகின்றேன்´ என்றார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.