கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் முன்னெடுக்குமாறு,சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சவப்பெட்டிகளையும் இலவசமாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன.

இனம், மதம் பேதமின்றி சகலருக்கும் அரச செலவில் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்குமாறு,  ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாரென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய செலவுகளுக்கான கொடுப்பனவை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.