கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக நேற்று முன் தினம் சனிக்கிழமை பொரல்லை கனத்தை மயானத்தில் அமைதிப் போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயான வளாகத்தில் வெள்ளைத் துணிகளை கட்டி அமைதி போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  சில செயற்பாட்டாளர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த அமைதிப்போராட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் பேதங்களின்றி பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொரளை கனத்தை மயான வளாகத்தில் கட்டப்பட்டிருந்த வெள்ளைத்துணிகள் நேற்றைய தினம் இரவோடிரவாக அகற்றப்பட்டிருந்தன. இது குறித்து ஏற்கனவே குறித்த போராட்டத்தில் பங்குபற்றியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ட்விட்டர் பதிவொன்றை இட்டிருந்தார்.


மேலும் இது குறித்து குறித்த போராட்டத்தில் இணைந்திருந்த மற்றுமொரு அரசியல் பிரமுகரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலான பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதனை இங்கு பகிர்கிறோம்:

நேற்று பிந்திய இரவில் நான் பொரளை தகனச்சாலை வழியாக அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அமைதி நடவடிக்கையின் வெளிப்பாட்டை காணச் சென்றேன், அப்போது அங்கே ஒரு பொலிஸ் குழுவினர் பாதுகாப்பு மேலங்கிகளை அணிந்து கொண்டு தகன வாயிலை சுற்றி வருவதை அவதானித்தேன் , இந்நேரத்திலே மயான வாயிலில் நூற்றுக்கணக்கான வெள்ளை துணிகள்  தொங்கிக் கொண்டிருந்தன.

அவர்கள் நல்லவர்கள் அல்ல என்று எனக்குத் தெரியும் பொரளை தகனச்சாலை வேலியில்  இந்த பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளால் தான் எதிர்ப்பின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ள வெள்ளைத் துணிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன என்பதை நான் இப்போது அறிந்து கொண்டேன்.

இது ஒரு நல்ல நோக்கத்திற்காக அமைதியை விரும்பும் சமூக ஆர்வலர்களின் செயற்பாட்டை தடுக்கும் அரசின் வெளிப்படையான முயற்சி, மற்றும் அடக்குமுறையின் தெளிவான அடையாளமாகும்.

இந்த எதிர்ப்பு அலைகள் நிச்சயமாக அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது, ஆகவே கவனஈர்ப்பு விடயத்திலே நாங்கள் வென்றுள்ளோம்.

நீங்கள் அங்கு கட்டப்பட்டிருந்த வெள்ளை துணிகளை அகற்றியிருக்கலாம், ஆனால் அந்த செய்தி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரவியுள்ளது. 

இன்று, அமைதியான முறையிலே எதிர்ப்பினை வெளிக்காட்ட  வெள்ளைத் துணிகள் எல்லா இடங்களிலும் உயரமாக பறக்கின்றன. 

நீங்கள் எம்மை மௌனிக்க செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் எம்மை மௌனமாக்க முடியாது, 

உங்களது மீறுதல் இப்போது உலகிற்கு தெளிவாகவே தெரிகிறது. 

Link : https://www.facebook.com/alizahirmoulana/posts/4302412866452002?__cft__[0]=AZWIDM4OJ01825xw1Jgw3q9eeo1SOs8u1MUzzrSb-hXPi-R5zdUnVA2u7RuMjrf-2L1FtmSuvdxldk43uzwJAMWr_ZTblcxTKu3_l0zOE9lyvOuvcPqOcEXAJJ_qKF186e6Un0b1eAb2C3DvHOlCWEG7&__tn__=%2CO%2CP-R








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.