´பலாத்கார பிரேத எரிப்பை நிறுத்து´ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலர் இன்று (23) காலை பொரள்ளை மயானத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

ஒரு நபரின் மரணம் அவரது குடுபத்தினர் அனைவருக்கும் மிகவும் சோகத்தை தர கூடிய தருணம் ஆகும்.

அந்த வகையிலே இந்த நாட்டில் எந்தவொரு மதத்தை சார்ந்தவர் மரணித்தாலும் அவரது இறுதி சடங்குகளை நிறைவேற்றுவது இந்நாட்டில் எல்லா குடிமக்களினும் ஒரு உரிமையாகும்.

 இன்று விஞ்ஞானத்தை மறுத்து மூட நம்பிக்கையின் பின்னால் நாடு சென்று கொண்டிருக்கின்றது. அதனால் பௌத்தர்கள் கூட நமது மத சடங்குகளின் படி கட்டாயம் செய்யப்பட வேண்டிய பூஜையினை கூட இறந்த உடலுக்கு வழங்குவதற்கான வாய்ப்பினை இழந்து விட்டு இருக்கின்றார்கள். 

விசேடமாக பௌத்தர்கள் பூதவுடலுக்கு செய்யும் அவ்விசேட பூஜையை செய்வதற்கு பௌத்த மக்களுக்கு இடம் அளிக்க வெண்டும். அதே போல் பிற மதத்தை சார்ந்தவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத வழிபாடுகளை நடாத்துவதற்கு இடம் அளிக்க  வெண்டும் '

இன்று உலகத்தில் 190 மேற்பட்ட நாடுகளில் பூதவுடல் அடக்கம் செய்யபடுகின்ற சந்தர்ப்பத்திலே உலக சுகாதார அமைப்பு மிக தெளிவாக இதற்கான பரிந்துரைகளை வழங்கி இருக்கின்றது. 

உலக சுகாதார அமைப்பின் அனைத்து பரிந்துரைகளை மற்ற எல்லா நேரங்களிலும் ஏற்று நடக்கும் சந்தர்ப்பத்தில் இந்த விடயத்தில் மாத்திரம் அதனை ஏற்க அறுப்பது ஏன்? என்று நாம்  அரசாங்கத்திடம் கேட்க விரும்பிறோம்.

எனவே  இது தொடர்பான பக்கச்சார்பற்ற நிபுணர் குழு நியமிக்கப்பட்டு  ஓர் மதம் இன்றி எல்லாவித மதங்களுக்குமாண நீதியான நியாயமான  ஒரு தீர்ப்பை வழங்கி  அவரவரது மதத்துக்கு ஏற்ப மரணித்தவர்களின் இறுதி சடங்கை செய்வதற்கான வாய்பை வழங்க வெண்டும் என்பதே எமது கோரிக்கை ஆகும். 

என்று தெரிவித்தார். 


இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், எமது நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை குற்றவாளிகளை போல் இந்த அரசாங்கம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அவர்களது உறவினர்களுக்கு காட்டாமல் பலாத்காரமாக தகனம் செய்யும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.