நேற்றைய தினம் (26) 598 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் ஐவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரியவருகிறது.

அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 235 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அவற்றில் அவிசாவளை பிரதேசத்தில்  மாத்திரம் 150 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தவிர கம்பஹா மாவட்டத்தில் 164 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 84 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், கடந்த இரு தினங்களாக கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படினும், அவிசாவளை பிரதேசத்தில் தொற்று அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.