இலங்கையில் பிறந்து நியூஸிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருக்கும் வனுஷி வோல்டர்ஸ் தான் இலங்கை வம்சாவளி என்பதனை பெருமையாக தன்னுடைய கன்னியுரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலும் உரையாற்றிய வனுஷி, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உரையில், "ரிச்சர்ட் என்னுடைய தந்தையின் அத்தான், ஒரு ஊடகவியலாளர். 1990 இல் அரசாங்கத்தினை விமர்சித்தமைக்காக கொல்லப்பட்டார்." என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.