பிரபல கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மசிறி பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் டுபாயில் வைத்து சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் (29) கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.