பாராளுமன்றத்தின் எந்தவொரு பணியாளருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற பணியாளர் அண்மையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 'றப்பிட் அன்ரிஜென்' பரிசோதனையில் குறித்த பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென்பது கண்டறியப்பட்டதுடன், இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அவர் பணியாற்றிய பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்ட 100ற்கும் அதிகமான பணியாளர்கள் தொடர்ச்சியாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லையென்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற செயற்பாடுகள் எந்தவித தடையும் இன்றி வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.