சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படாத நபர்கள் வசிக்கும் அடலுகம போன்ற பிரதேசங்களுக்கு தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இன்றைய நிலையில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 1,310 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 44 பேர் உயரடுக்கு பாதுகாப்பு துறையில் உள்ளவர்கள் எனவும் அவர்களில் இருவர் மாத்திரம் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேபோல், தொடர்ந்தும் 200 பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். (AD)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.