தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து இன்று (Burevi) சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது பெரும்பாலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை இன்று (டிசம்பர் 02ஆம் திகதி) மாலையில் அல்லது இரவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சூறாவளியினால் பின்வரும் சேதங்கள் ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • குடிசைகள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் வெளிச்ச கட்டமைப்புக்கள் சேதமாகலாம்
  • கூரைகள் அல்லது சீட்கள் சேதமடையலாம்
  • மின் மற்றும் தொடர்பாடல் பாதிக்கப்படலாம்
  • மரங்களின் கிளைகள் முறிந்து விழலாம் மற்றும் பெரிய மரங்களும் வேருடன் விழும் சாத்தியம் உண்டு.
  • நெற்பயிர்கள், வாழை, பப்பாளி மற்றும் பழத்தோட்டங்களுக்கு சேதங்கள் ஏற்படலாம்.
  • துறைமுக படகுகளுக்கு சேதங்கள் ஏற்படலாம்
  • திடீர் வெள்ளம் ஏற்படலாம்
  • தாழ்வான கரையோர பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படலாம்
மேலும்,
  • கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடல் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் 
  • மேலும் கரையோரங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன், 
  • கரையோர பிரதேச குடிசைகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்
  • ஏனையோர் வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
  • மரங்கள் மற்றும் மின் இணைப்புக்களுக்கு அருகில் இருப்பவர்கள் அவதானமாக இருக்கவும்
  • இடியுடன் மழை பெய்யும் போது கம்பி தொடர்புடைய தொலைபேசி (Land Phone) மற்றும் மின் சாதனங்களை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்.
  • வரவிருக்கும் தீவிரமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
  • அவசர நிலைமைகளின் போது உள்ளுர் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.
  • வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் ஆலோசனைகளை கவனத்துடன் பின்பற்றவும்.
அவசர இலக்கம் - 117 
(அனர்த்த முகாமைத்துவ நிலையம்)
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:
+94 112 136 222 /
+94 112 670 002



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.