இலங்கையில் இன்றைய தினம் (02) இரு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்வடைந்துள்ளது.

மரணமடைந்தவர்களில் ஒருவர் சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் என்றும் இவர் கடந்த 30 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய நபர் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் என்றும் அவர் வீட்டில் மரணமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.