சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேலும் 05 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளது.

விபரம்:

அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி அகலவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணித்துள்ளார்

மக்கொனை பிரதேசத்தை சேர்ந்த 86 வயதான பெண் நேற்று (17) வீட்டில் மரணித்துள்ளார்.

கொழும்பு 15 இனை சேர்ந்த 76 வயதான ஆண் இன்று (18) ஹோமாகமை வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.

மஹரகமை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான ஆண் இன்றைய தினம் (18) ஹோமாகமை வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.

வதுபிடிவலை பிரதேசத்தை சேர்ந்த 86 வயதான ஆண் இன்று (18) வீட்டில் மரணித்துள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.