கொழும்பு ரிஜ்வே ஆர்யா வைத்தியசாலையில் இன்று அதிகாலையில் அனுமதிக்கப்பட்ட முகத்துவார பிரதேசத்தினை சேர்ந்த பிறந்து 20 நாட்களே  பூர்த்தி செய்த குழந்தையொன்று இன்று மாலை மரணமடைந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசுந்தர தெரிவித்தார்.

குறித்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது கடுமையாக நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் அதற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் நியுமோனியாவின் பாதிப்பினாலேயே குழந்தை மரணித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் அக்குழந்தையின் பெற்றோருக்கு கொவிட் தொற்று இல்லை என்று தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.