கொழும்பு 15  முகத்துவாரம் பெர்குசன் வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். பாஹிம் என்பவரது 20 நாட்கள் ஆன, குழந்தை ஷாயிக்கின் உடல் இன்று (09) எரிக்கப்பட்டதாக சமூக சேவையாளர் ஹுசைன் போல்ட் சியன நியூசிடம் தெரிவித்தார்.

இக்குழந்தை நியுமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று உயிரிழந்ததுடன், கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும் குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இல்லை என்று முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுடன் உயிரிழந்து உறவினர்களால் பொறுப்பெடுக்கப்படாக 20 உடல்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியில் தகனம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கிய நிலையில் சட்டமா அதிபரால் சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு விடுக்கப்பட்ட பரிந்துரையின் பிரகாரம் குறித்த உடல்கள் இன்று எரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.