கொவிட் மரண உடல்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? என்பது தொடர்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை நேற்றைய தினம் (29) சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நியமனம் செய்யப்பட்ட புதிய நிபுணர்கள் குழுவின்  தலைவர் பேராசிரியர் ஜெனிபர் பெரேராவின் கூற்றுப்படி, தகனம் மற்றும் அடக்கம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது நாளை (30) ஜனாதிபதியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையானது முற்றிலும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்!

 நிபுணர்களின் பரிந்துரைகளின் பேரில் செயல்படுவோம் என அரசாங்கம்  ஏற்கனவே  அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இதை நடைமுறைப்படுத்துமாறு  கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குறித்த  அறிக்கை மக்களது பார்வைக்காக வெளிப்படையாக முன் வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறேன். 

வேதனைக்குள்ளான சமூகத்திற்கும் ,  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் , ஒரு முழு நாட்டின் சுதந்திரத்தை வெளிக்காட்டும் வகையிலும் இறைவன் உதவியால் ஒரு சாதகமான முடிவு கிடைக்க வேண்டும் என நான் உளமாற பிரார்த்திக்கிறேன்... ஆமீன்! இன்ஷா அல்லாஹ்!

Update:

மேற்படி குழுவின்  அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.