உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட அதன் பிற சேவைகள் திடீரென்று திங்கட்கிழமை மாலையில் முடங்கியுள்ளன. 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்த வேளையில், #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் வரைலாகி வருகின்றன.

கூகுள் இணைய சேவை முடக்கம் தொடர்பாக கண்காணித்து வரும் டவுன் டிடெக்டர் என்ற அமைப்பு, உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான முடக்கங்கள் திங்கட்கிழமை மாலையில் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த திடீர் முடக்கம் காரணமாக, கூகுள் நிறுவனத்தின் எந்தவொரு சேவையையும் பயனர்களால் அணுக முடியவில்லை.

பல தனியார் அலுவலகங்கள், தனி நபர்கள் தங்களின் பிற பரிவர்த்தனை தொடர்புகளுக்கு கூகுள் நிறுவன மின்னஞ்சல், கூகுள் டிரைவ் போன்றவற்றை நம்பியிருக்கின்றன. இதனால், சேவை முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.



(BBC)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.