கொவிட்டினால் மரணமடைகின்றவர்களின் பிரேதங்களை எரிப்பதற்கு எதிராக கதைத்து நாட்டிற்குள் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட கடும்போக்காளர்களுக்கு தேவையேற்பட்டுள்ளது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

இவ்விடயங்களைத் தமது தர்மத்தின் பிரகாரம் மக்களுக்கு சரியானதைச் சொல்லிக் கொடுக்குமாறு சகல மத தலைவர்களிடமும் நாம் வேண்டிக் கொள்வதுடன் அவ்வாறு செய்வதால் நாட்டில் இல்லாத ஒன்றை இருப்பதாக பாசாங்கு செய்ய அரசியல்வாதிகளுக்கு முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் கட்டப்பட்ட 2 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் அண்மையில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

திவுலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவிற்கு மேற்கே கொடிகமுவ மற்றும் திக்லந்த பகுதிகளில் இந்த வீடமைப்புகள் திறக்கப்பட்டன.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகனத்திற்கு ஏற்ப, கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவிறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் " உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வேலைத் திட்டம் நாட்டில் உள்ள 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.