இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் இந்திய அணி 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்திய அணி முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்துள்ளது. 75 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு ஆடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.