இலங்கையில் கொவிட் தொற்றுடன் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு அந்நாட்டு அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


இது உண்மையாக இருப்பின், இலங்கை தனது சொந்த குடிமக்கள் சிலரது இறுதி சடங்குகளை எளிதாக்குவதற்கு அண்டை நாட்டைக் கோருவது அவமானமானது.  அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் அவர்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப இறுதி சடங்குகளைச் செய்யும் உரிமை இருக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.