இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கான ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் தலைமையில் நேற்று (09) நடைபெற்ற இந்த ஆலோசனை சபைக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், முஸ்லிம்களின் முக்கியத்துவம் பற்றியும் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு செய்துள்ள சேவைகள் பற்றியும் கருத்து தெரிவித்தார். 

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை மூலமாக நிறைய சமூக பணிகளையும் ஏனைய இன மக்களுடன் சேர்ந்து வாழக்கூடிய வகையிலான நிகழ்ச்சிகள் நடாத்தப்பட வேண்டும் என்றும் சம காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மற்றும் விடயங்களையும் எடுத்துக்கூறுவதற்கு சாதகமாக முஸ்லிம் சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை உருவாக்குவதற்கு இது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பாவிக்கப்பட வேண்டும் என்றும் கேடடுக்கொண்டார்.

இந்த முஸ்லிம் சேவைக்கான ஆலோசனை சபை கூட்டத்தில் ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் விக்ரமசேன அவர்களும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் ஒலிபரப்பு மகா அதிகாரி ஆகியோரும் ஊடக அமைச்சின் ஊடகத்துறை செயலாளர் உட்பட இன்னும் பல முக்கியமான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

ஊடக அமைச்சின், தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த, முஸ்லிம் சேவைக்கான ஆலோசனைச் சபை ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாகும். 

1.முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் சியன ஊடக வட்டத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர்

2.கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவரும் வக்ப் சபையின் அங்கத்தவருமான மௌலவி அல்ஹாஜ்  பஸ்லுர் ரஹ்மான் மஹ்ழரி

3.பிரபல சமூக சேவகரும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல் உதவித் தலைவருமான அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹுத்தீன்

4.பிரபல சமூக சேவகரும், பிரபல வர்த்தகரும், கண்டி லைன் பள்ளிவாசல் தர்மகர்த்தாவுமான அல்ஹாஜ் அப்ஸல் மரிக்கார்

5.ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக் 

ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் - முஸ்லிம் சேவை தினமும் நான்கு மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதாகவும், முஸ்லிம் சேவைக்கு என்று நல்ல பொறுப்பான பதவிகள், நல்ல வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்தார். 

அதே போன்று ஒலிபரப்பு மகா அதிகாரியும், புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு இன்னும் பல முக்கியமான நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி 95 வருடங்கள் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் மிகவும் முக்கியமான பணிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

ஊடகத்துறை அமைச்சின் செயலாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இந்நியமன கடிதங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தார். 

மேற்படி நியமனங்களைப் பெற்ற எமது சியன வட்டத்தின் தலைவர் உட்பட அனைவருக்கும் சியன ஊடக வட்டத்தின் சார்பிலும், சியன நியூஸ் இணையத்தளத்தின் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.