கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்காக கேகாலை பிரதேசத்தை சேர்ந்த தம்மிக பண்டார என்பவரால் தயாரிக்கப்பட்ட நிலையில் வதுபிடிவல ஆதார வைத்தியசாலையிலுள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு அவர்கள் குணமடைந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வைத்திசயசாலையின்
வைத்தியர் உட்பட 07 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

வைத்தியர் ஒருவர், தாதியர் இருவர், கணக்கீட்டு பிரிவை சேர்ந்த ஒரு ஊழியர் மற்றும் சிற்றூழியர்கள் மூவருக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதனையடுத்து வதுபிடிவல வைத்தியசாலையின் 10வது வார்ட்டினை தொற்று நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தம்மிக பண்டாரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த பாணி வகையினை முதலில் வதுபிடிவல வைத்தியசாலையில் இருக்கும் தொற்றாளர்களுக்கு வழங்கி பரீட்சித்ததாகவும் அவர்கள் குணமடைந்ததாகவும் கூறி அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அதனை பருகிய செய்திகள் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.அதனை தொடர்ந்து கேகாலையில் குறித்த நபரின் வீட்டின் அருகில் ஆயிரக்கணக்கானோர் குறித்த பாணியை பெற்றுக்கொள்வதற்காக ஒன்று கூடியிருந்த படங்கள் சமூக ஊடகங்கள் மூலம வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.